நாள் முழுதும் பேசிக் கொண்டிருக்கிறோம் - இருந்தும்
தீர்ந்த பாடில்லை 
உன்னை பற்றிய பேச்சுக்கள்....
உன் பெயரெழுதி
கோலம் போட்டு வைத்தேன்..
கோலம் அழிகையில்- நீயும்
காணாமல் போய் விடுவாய்
மலையில் வீழ்ந்தாலும் -சூரியன் 
மரித்து போவதில்லை 
நிலவுக்கு ஒளியூட்டி- தன்னை 
நீடித்து கொள்கிறதே........; 
நீ வந்தாய் என் வாழ்விலே…
பூ பூத்தாய் என் வேரிலே..
நாளையே… நீ போகலாம்..
கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?
உண்மையாய்
உறவாடிய உறவுகள்
வேடிக்கைகளை
காரணங்களென கொண்டு
பிரிந்திடும்போது


தாயின்கருவில் வந்தது
என் உயிர்
தாயின் அரவணைப்பில் வந்தது
இந்த உலகம்

தோழி நீ உடன் வருவாயானால்
மரணம் என்னடி
மரணத்தின் பின்
நரகம் கூட சம்மதமே.

கவிதை எழுதத் தொடங்கும் முன்பே
புனைப் பெயர்களைத் தேடிக் கொண்டன உள்ளங்கள்
கவிதை எழுதும் ஆவலா?
எழுத தெரியாதென்ற ஏக்கமா? தெரியவில்லை..

உரிமையோடு போடும்
சண்டைகளும் கோபங்களும்
நட்புக்குமட்டுமே
சொந்தமானது -அதை
நாம் புரியமறுக்கும்

சோகத்தின் பக்கத்தில்
சொர்க்கம் இருப்பதையும்;;;;;;
சுகத்தின் பக்கத்தில் 
துக்கம் இருப்பதையும்;;;;;;;;;;
நீ அறிந்து கொள்!
சில சோகங்களை
நேசிக்கப் பழகு
சில சோகங்களை
மறக்க பழகு;;;;

நான்
நேசித்த
சில உறவுகள்
என்னை நேசிக்கவில்லை
என்னை நேசித்த
ஆயிரம் சொந்தங்கள் என்
அருகில் சூழ்ந்திருந்தும்
அழும் குரல் கேட்டு
அரவணைப்பது நட்பு


மலை அருவி மான் குட்டிபோல
துள்ளித்துள்ளீ உன் முகத்தின்
முன் நிற்க முடியாமல்
கடலில் குதித்து தற்கொலை
செய்கின்றன

பெண்ணே
உன் தொலைபேசி இலக்கத்தை சேமிப்பாக்கி
உன் வார்த்தைகளை
என் செவிகளுக்கு அடைக்கலம் ஆக்கினேன்


.........................
ஒளியை விழுங்கிய இருட்டு,
உயிர் தந்த முகிலை
மறைத்து கொட்டும் கொடு மழை,
பாறைகளை புரட்டிவிட்டு
கை காட்டி அகன்ற அலை,

பெண்ணே
உன் கண்ணிலே
ஓராண்டு காலம் வாழ்ந்த
ஒரு நினைவுகள் பெண்ணே



வாழும்போதே – வாயில்
சுய கொள்ளி வைக்கும்
சூரர்களே|!
உங்கள் சுவாசத்திற்கு
காபனுடன்
ஏன்
கட்டாய திருமணம்?

எம் - தமிழின்
"தலை எழுத்து"
தொலைந்து போன
இன்னொரு சோக நாளில்,
கறுப்பை கட்டி
அழுகின்றன - எம்
எழுத்துக்கள் எல்லாம்!

இப்போதிருக்கும்
எந்தக் கண்ணும்
காணாத காலத்திலேயே
நாங்கள் கர்ப்பமாகிவிட்டோம்
ஆனாலும்…

நான் உறங்கினாலும் என்
இதயம் உறங்கவில்லை
என் உள்ளத்தில் நீ உறைந்து என்
உறக்கத்தை ஏன் கலைக்கின்றாய்



நேரம் அடிக்கடி மாறாலாம்
நெருப்பு எப்படி நிறம் மாறும்?
நினைவுகளை கொடுத்துவிட்டு
கண்ணிரெண்டை கேட்பது காதலா?


பெண்ணே உன்
சிரிப்பும் பார்வையும்
செல்லகதைகளும்
என்னை கொல்லுதடி
உன் வரவுக்காய்
காலம் எல்லாம்
காத்திருப்பேன் பெண்ணே

நம் பயணப்பாதை
மரணத்தை தொடும்வரை
நாம் அறிவதில்லை
இறுதி இலட்சியம்
அதுவாகுமென்று;
அது புரியாமல்

என்
சுவாசத்தில்- நீ
கலந்தது
உண்மையென்றால்
என் மூச்சு
நிசப்தமடையும் வரை
என் காதலுடன்

இசைகேட்கமுடியாத
என் நெடுந்தூரபயணங்களில்
வந்து- அதை
இசையால் நிரப்பிய
உனக்கும்
உன் தோழமைக்கும்

எந்த ஒரு இதயம்
உன்னை பார்க்க
கூடாது என்று
சொல்லி மறக்க
துடிக்கிறதோ அந்த
இதயம் தன உன்னை

அன்று பூத்த பூவொன்று -மறுபடி 
இன்று மலர்கிறதே.


அன்றிலிருந்து நீ வாடினாய்- மறுபடி
இன்றிலிருந்து நீ வாடிவிடாதே


அன்றில் பட்ட துன்பங்களை மறந்து - மறுபடி
இன்றில் இருந்து புதுவாழ்வை ஆரம்பி.

உயிருக்குள் உயிராக
உடலோடு சுமந்து
உதிரத்தை உணவாக
உணர்வோடு ஊட்டி
உயிர்சேர்ந்த உறவாக

நண்பா!
இருக்கும் காலங்களை
இருட்டில் தொலைக்காதே..!
தொலைத்தால் மீண்டும்
”இழந்தகாலம்” கிடைக்குமா..?
கிடைத்தால் ”இறந்தகாலம்”
மீண்டும் நடக்குமா..!?

அனாதையாகத் தொட்டிலில் வீசியவளுக்குப்
புரியவில்லை அது மிளிரும் முத்து என


தன் குடும்பத்திற்காக நான் தூக்கியெறியப் விட்டேன்
உனக்காக என்னிடம் பல ஆராட்சிகள்


நான் யார் என்பதற்கு.. நீ சொல்லாமல்
வீசிய காரணத்தால்.

கனவிலும் கூட
என்னை மறந்துவிடாதே
என்று சொன்ன நீயா இன்று
கனவில்கூட நினைக்காதே
என்று சொல்கிறாய்

எழுதிய வரிகள் கவிதையாக
நினைத்தெல்லாம் கவிதையென


ஆனால் கவிதை சொல்ல
கவித் திறன் மட்டும் போதாது


உள்ளுணர்வின் உணர்வுகளும் தேவை
என என் கைகளுக்கு புரிந்தது.

அங்கமுடைந்தால் வருவது - முறிவு
தங்கமான நட்பு களங்கமானால் வருவது - முறிவு
உங்கள் அங்கங்களால் வரும் வியாதி - சொறிவு
உங்கள் அங்கங்களில் வரும் வியாதியும் - சொறிவு

என்னைப் புரிந்து கொள்ள பல முறை தோற்க நேரிட்டது.
ஒரு முறை வென்றேன் நான் அடுத்தவனையும் புரிந்தேன்.

வீதியிலே போகும்போது
பெண்னொருத்தியை பார்த்தேன்
பெண்ணே உன்னை பார்த்ததுமுதல்
எங்கேயோ பார்த்த்து போலவும்
உன்னைக் கண்டேன் ஒரு சிற்பமாக
என் கனவுகள் நிறைந்த பூந்தோட்டத்தில்


அன்பைத் தந்தாய் உன் இதயமாக
என் கண்ணீரை உனது சொந்தமாக்கினாய்


மனிதனின் இதய வயல்கள்
நன்றேனில் அன்பெனும்
நெற்பயிர்கள் நன்றாய்
விளையும்

நேற்றுவரை மொட்டாய் இருந்து 
ஆற்றலுள்ள பூவாய் மலர்ந்தவளே 
காற்றில் வாசம்வரும்போது திரும்பினேன் 
சீற்றமாய் நீ பார்க்கும் போதுதானடி 

மனிதக் கடலில் மிதக்கின்ற அழகிய முத்துக்கள்
இருட்டு வேளையில் உறங்கும் உணர்வில்
பாய்ந்து செல்லும் நீர் அலைகள்
தூங்காத அலை என்னும் எண்ணங்களுக்கும்
தூங்கிய மனமென்னும் ஆழக் கடல் அடிக்கும்
பிறக்கின்ற குழந்தைகளே கனவு.
அன்பென்னும் மூன்றெழுத்தால்
அன்னை என்ற பெயர் பெற்று
உறவென்னும் மூன்றெழுத்தால்
அறிவென்னும் இன்பம் தந்து