என் காதல் சின்னம்!


பெண்ணே
உன் தொலைபேசி இலக்கத்தை சேமிப்பாக்கி
உன் வார்த்தைகளை
என் செவிகளுக்கு அடைக்கலம் ஆக்கினேன்


இரவுவேளைகளில் 
என் நினைவுகளை நீர்மூலம் ஆக்கி
கனவுகளுக்கு ஓய்வு கொடுத்து
உன் செவியோரம்
என் வார்த்தைகளை மொழி பெயர்த்தேன்



உன் அழைப்புக்காக காத்திருந்து
என் இதயம் வெந்து போனது
உன் தொலைபேசி இலக்கம் சுழற்றி
என் விரல்கள் வீக்கம் அடைந்துவிட்டது



உன் முன்னால் காட்ட முடியாதவற்றை
தனியாக வீரம் காட்டி பேசுகிறேன்
தாஜ்மஹாலை பின்தள்ளி விட்டது
என் காதல் சின்னம் கையடக்க தொலைபேசி



நான் பிறந்த இலக்கத்தை மறந்தாலும்
உன் கைத்தொலைபேசி இலக்கத்தை
மறக்க முடியவில்லையே  எப்படியிருந்தும்
என் வாழ்வு வறுமையாகி போனது
உன் அழைப்புகளிலிருந்து பெண்ணே!!!!!!!!

Leave a Reply