தவறிப்போயுள்ள தமிழின் "தலை எழுத்து"


எம் - தமிழின்
"தலை எழுத்து"
தொலைந்து போன
இன்னொரு சோக நாளில்,
கறுப்பை கட்டி
அழுகின்றன - எம்
எழுத்துக்கள் எல்லாம்!


கடல்
இழந்த தவிப்பில்
அலைகள்.
தூண்டி தொலைந்து போன நாளில்
"துலங்கல்கள்" எல்லாம்
துன்பங்களை
தாங்கிய படி!


கலைந்து போன
எழுத்து
மனங்களே;
கடவுளாகியுள்ள
(சிவத்) தம்பி
மீண்டும் திரும்பி
"தமிழ்" செய்ய
தொழுவோமாக!


- எனக்கு எழுத்தறிவித்த ஆசான்களில் ஒருவரை   தொழ,
 இறுதியில் அவரின் எழுத்துக்களே துணை வந்துள்ளன!

Categories: , Share

Leave a Reply